Home /News /sports /

ஜெண்டில்மேன்னு நெனச்சோம், நியூசிலாந்துமா இப்படி?- நியூசிலாந்து கிரிக்கெட்டிலும் நிறவெறி- அம்பலப்படுத்திய ராஸ் டெய்லர்

ஜெண்டில்மேன்னு நெனச்சோம், நியூசிலாந்துமா இப்படி?- நியூசிலாந்து கிரிக்கெட்டிலும் நிறவெறி- அம்பலப்படுத்திய ராஸ் டெய்லர்

ராஸ் டெய்லர்

ராஸ் டெய்லர்

உலகில் எங்கு வேண்டுமானாலும் நிறவெறி இருக்க முடியும் ஆனால் நியூசிலாந்து போன்ற ஜெண்டில்மேன்கள் நிரம்பிய அணியில் நிறவெறி பாகுபாடு இருக்காது என்று நினைப்பவர்களுக்கு அந்த அணியிலிருந்து சமீபமாக ஓய்வு பெற்ற ராஸ் டெய்லர் பெரிய ஷாக் கொடுத்துள்ளார். அதாவது நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது ‘வெள்ளை’ தான் என்றும் தான் ஒரு பழுப்பு நிறத்தவன் என்று பல முறை ஓய்வறையில் நட்புக்கலாய்ப்பு என்ற பெயரில் நிறவெறி மனோபாவம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாவும் குண்டைத் தூக்கி போட்டுள்ளார் ராஸ் டெய்லர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    உலகில் எங்கு வேண்டுமானாலும் நிறவெறி இருக்க முடியும் ஆனால் நியூசிலாந்து போன்ற ஜெண்டில்மேன்கள் நிரம்பிய அணியில் நிறவெறி பாகுபாடு இருக்காது என்று நினைப்பவர்களுக்கு அந்த அணியிலிருந்து சமீபமாக ஓய்வு பெற்ற ராஸ் டெய்லர் பெரிய ஷாக் கொடுத்துள்ளார். அதாவது நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது ‘வெள்ளை’ தான் என்றும் தான் ஒரு பழுப்பு நிறத்தவன் என்று பல முறை ஓய்வறையில் நட்புக்கலாய்ப்பு என்ற பெயரில் நிறவெறி மனோபாவம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாவும் குண்டைத் தூக்கி போட்டுள்ளார் ராஸ் டெய்லர்.

    அவர் தனது சுயசரிதை நூலுக்கே “Ross Taylor Black & White” என்று நிறபேத அடிப்படையில் தலைப்பிட்டுள்ளார் என்றால் நாம் பார்த்துக் கொள்ளலாம். ராஸ் டெய்லர் ஒரு கலப்பினப் பிரிவைச் சேர்ந்தவர்.

    இந்தப் புத்தகத்தில் ராஸ் டெய்லர், “நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளை விளையாட்டே, என்னுடைய கிரிக்கெட் வாழ்நாள் முழுதும் நான் ஒரு வழக்கத்துக்கு மாறானவன் என்றே நடத்தப்பட்டேன். வெனிலா வரிசையில் நான் ஒரு பிரவுன் முகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் இதில் சவால்கள் இருக்கின்றன. பொதுமக்களுக்கோ, அணியின் சகவீரர்களுக்கோ நிறபேத அடிப்படையில் கேலி செய்வது என்பது ரேசிசம், நிறவெறி என்பதே தெரியாது, புரியாது, அவர்கள் உணர்வு அவ்வளவு மழுங்கி விட்டிருந்தன. பாலினீசியன் சமூகம் நியூசிலாந்து கிரிக்கெட்டில் பெரிதாக ஆடியதில்லை. இதனால் சில வேளைகளில் என்னை மக்கள் மவோரி என்றோ இந்தியர் என்றோ நினைத்துக் கொள்வார்கள்.

    ஓய்வறையில் என்னை நட்பு ரீதியாக கேலி செய்வார்கள், ஆனால் அது நிறபேத கேலிதான். ஒரு சகவீரர் என்னிடம் அடிக்கடி ‘நீ அரை நல்லவன்’ என்று நான் கலப்பு என்பதை நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அதாவது ‘நீ அரை நல்லவன், ஆனால் நான் உனது எந்த அரை நல்லவன் என்று கூறுகிறேன் என்பது உனக்குத் தெரியாது’ என்பார். நான் மட்டுமல்ல இன்னும் சில வீரர்களும் இன பேத அடிப்படையிலான கேலிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

    ஆனால் நான் இதையெல்லாம் சொல்லும் போதே ஒரு ‘பகேஹா’ (வெள்ளை நியூசிலாந்தர்) நான் சொல்வதைக் கேட்டால், இதெல்லாம் சரி, அப்படிப்பேசியதெல்லாம் நட்பு ரீதியான கேலிதானே என்பார். ஆனால் அவர் வெள்ளை அவரை யாரும் இப்படி கேலி செய்திருக்க மாட்டார்கள். அவர்களை யாரும் திருத்துவதில்லை.

    நாம் இதை வெளியே சொன்னால், சாதாரண தீங்கற்ற ஜாலியான கிண்டல் கேலியை பிரச்சனையாக்கி நிறவெறி என்ற பெரிய குற்றச்சாட்டை அட்டையாகப் பிடித்து நிறவெறிபேத விவகாராமாக்குகிறோம் என்று திருப்பி நம்மையே குற்றம் சொல்வார்கள். இது ஒருமாதிரி தடித்தனத்தை வளர்த்து விட்டுள்ளது, ஆனால் இப்படியெல்லாம் நடந்து கொள்வது சரியா?

    நிறவெறி என்ற உலகளாவிய ஒன்றுக்கு நியூசிலாந்து வீரர்கள் உணர்வற்றவர்களாகவே இருக்கின்றனர்” என்று ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

    இவரது இந்தக் குற்றச்சாட்டு அங்கு பரபரப்பை ஏற்படுத்து நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணையம் ’நிச்சயம் நாங்கள் இதைக் கையிலெடுப்போம், ராஸுக்காக நீதி கேட்போம் என்று போர்முழக்கம் இட்டுள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, New Zealand, Racism

    அடுத்த செய்தி