5 நாட்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்

இந்த ஆசஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார்.

news18
Updated: August 5, 2019, 6:06 PM IST
5 நாட்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்
ரோரி பர்ன்ஸ்
news18
Updated: August 5, 2019, 6:06 PM IST
டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் விளையாடிய வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆசஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அனி வீரர்கள் சிறப்பாக விளையாடி 374 ரன்களை சேர்த்தனர். 2-வது இன்னிங்கை தொடங்கிய ஆச்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 487 ரன்களை சேர்த்தது.

இந்த ஆசஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார். கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி 398 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.

இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ் இந்த ஆசஸ் தொடரில் 5 நாட்களும் விளையாடி சாதனை படைத்துள்ளார்இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரோரி பர்ன்ஸ் இரண்டாவது நாள் முழுவதும் பேட்டிங் செய்தார். 3-வது நாளில் 133 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 4-ஆம் நாளில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய பிறகு ஆட்டத்தை ஆரம்பித்த ரோரி பர்ன்ஸ் 21 பந்துகள் எதிர்கொண்டார். 5-வது நாளில் 11 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 5 நாட்களும் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோரி பர்ன்ஸ்

இதற்கு முன்னதாக பாய்காட், லாம்ப், ப்ளிண்டாஃப், கிம் ஹூஜஸ், ரவி சாஸ்திரி, அட்ரியன் க்ரிஃபித், அல்விரோ பீட்டர்சன், புஜாரா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Also watch

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...