ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ரோகித், விஜய், பார்த்திவுக்கு இடம் - தவான் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, முரளி விஜய், பார்த்திவ் படேல் இடம்பெற்றுள்ளனர். 

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ரோகித், விஜய், பார்த்திவுக்கு இடம் - தவான் அவுட்
ரோகித் சர்மா (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: October 27, 2018, 8:54 PM IST
  • Share this:
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடர் முடிந்ததும். இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மிக முக்கியமான பலப்பரீட்சையாக கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடர் அடுத்த மாதம் 11-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பெரிய சவாலானதாக இருக்கும்.

முக்கிய வீரர்கள் இல்லாமல் பல தோல்விகளை சமீபத்தில் கண்ட ஆஸ்திரேலிய அணி மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், இந்திய அணியை மிக வலிமையுடன் ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.


முரளி விஜய்


இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் கடைசியாக டெஸ்ட் அணியில் விளையாடிய ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். தமிழக வீரர் முரளி விஜய், பார்த்திவ் படேல் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

பல போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த தவான் நீக்கப்பட்டுள்ளார். இதேபோல, ஆசிய கோப்பை தொடரில் காயமடைந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பெயரும் இடம்பெறவில்லை.
ஹர்திக் பாண்ட்யா


டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கீழ் வருமாறு :-

விராட்கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், பிரித்விஷா, முரளிவிஜய், புஜாரா, ரோகித்சர்மா, ஹனுமா விகாரி, ரிசப் பந்த், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது‌சமி, உமேஷ்யாதவ், புவனேஷ்வர் குமார், பார்த்தீவ் படேல், இஷாந்த் சர்மா.

மேலும் செய்திகள்..

ஆறு டி20 போட்டிகளில் தோனி ஏன் இல்லை? - தேர்வுக்குழு தலைவர் விளக்கம்

சச்சினா... கோலியா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கவாஸ்கர்!

Also See..

First published: October 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்