ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிஷப் பண்ட் விபத்து... 'இது வெட்ககேடு'.. இன்ஸ்டாகிராமில் பொங்கிய ரோஹித் சர்மாவின் மனைவி

ரிஷப் பண்ட் விபத்து... 'இது வெட்ககேடு'.. இன்ஸ்டாகிராமில் பொங்கிய ரோஹித் சர்மாவின் மனைவி

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் விபத்து தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பகிரும் நபர்களை ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா கடுமையாக சாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரரான ரிஷப் பண்ட் நேற்று கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்ற போது ரிஷப் பண்ட்டின் கார் சாலை தடுப்பு மீது கார் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது . படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் காரின் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி தீவிபத்தில் இருந்து தப்பியுள்ளார்.

கார் எரிந்து சாம்பலான நிலையில், படுகாயங்களுடன் சாலையில் கிடந்த ரிஷப் பண்ட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த காரில் ரிஷப் பண்ட் மட்டுமே தனியாக பயணித்துள்ளார். இவர் தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என காவல்துறை விசாரணையில் கூறப்பட்டது. ரிஷப் பண்ட் விபத்து தொடர்பாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

குறிப்பாக விபத்து தொடர்பான புகைப்படங்கள், ரிஷப் பண்ட் மருத்துவமனையில் இருக்கும் படங்கள், விபத்து நிகழ்ந்த இடத்தின் வீடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இது போன்ற செயல்கள் சமூகத்தின் உணர்வற்ற தன்மையை பிரதிபலிப்பதாக கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திக்கா பொங்கி எழுந்துள்ளார். ரித்திக்கா இது தொடர்பாக தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்… 2ஆம் இடத்தில் நீடிக்கும் இந்திய அணி…

அதில், ஒருவர் அடிபட்டு படுகாயம் அடைந்து தவிக்கும் சூழலில் அவரின் படங்களை, வீடியோக்களை பதவிடுவது வெட்கத்திற்குரியது. இது போன்ற படங்களை பார்க்கும் போது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கும். இது ஊடகத்தின் செயல் அல்ல, உணர்வற்ற செயலாகும் என்றுள்ளார்.

உத்தரகாண்டின் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பிசிசிஐ அளித்துள்ள தகவல்படி ரிஷப் பந்த்தின் முன் நெற்றியில் 2 இடங்களிலும், வலது கால் மூட்டு, வலது கை மூட்டு, பாதம் ஆகிய இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Instagram, Rishabh pant, Rohit sharma