தோனி பிறந்த நாளை எப்படி கொண்டாடப் போகிறீர்கள்...? அனைவரையும் சிரிக்க வைத்த ரோஹித் சர்மாவின் பதில்

இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 647 ரன்களை எடுத்துள்ளார்

தோனி பிறந்த நாளை எப்படி கொண்டாடப் போகிறீர்கள்...? அனைவரையும் சிரிக்க வைத்த ரோஹித் சர்மாவின் பதில்
ரோஹித் சர்மா
  • News18
  • Last Updated: July 7, 2019, 2:06 PM IST
  • Share this:
தோனி பிறந்தநாளை எப்படி கொண்டாடப் போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் ரோஹித் சர்மா.

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்களை விளாசினார் ரோஹித் சர்மா. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 647 ரன்களை எடுத்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் 5 சதங்களை அடித்துள்ளார்.


அதிலும் தொடர்ச்சியாக கடைசி 3 போட்டிகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் தோனி பிறந்தநாளை எப்படி கொண்டாடப்போகிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்த பதில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இது குறித்து ரோஹித் சர்மா, ‘என்ன சொல்வது. பிறந்தநாளன்று என்ன சொல்வார்கள். வாழ்த்து தான் சொல்ல முடியும். தோனி பிறந்தநாளன்று மான்செஸ்டர் அல்லது பிர்மிங்காம்-க்கு பயணம் செய்து கொண்டிருப்போம். தோனி பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவோம். அந்த புகைப்படங்களை உங்களுக்கு தருகிறோம் என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். ரோஹித் சர்மாவின் இந்த பதிலை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.Also watch

First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading