ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

”உனக்குள் இருக்கும் மனிதனை பார்க்கையில் பெருமையாக உள்ளது” ரோஹித் சர்மா மனைவி நெகிழ்ச்சி பதிவு

”உனக்குள் இருக்கும் மனிதனை பார்க்கையில் பெருமையாக உள்ளது” ரோஹித் சர்மா மனைவி நெகிழ்ச்சி பதிவு

ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி

ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி

ரோகித் சர்மாவின் ஆட்டத்தை ரசிகர்கள் நேற்று வெகுவாக பாராட்டி வரும் நிலையில் அவரது மனைவி பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயத்துடன் களமிறங்கி கடைசி வரை போராடிய ரோகித் சர்மாவுக்கு அவரது மனைவி பாராட்டி பதிவிட்டு இருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேன ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்கியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது.

இந்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் கேப்டன் ரோகித் சர்மா வெளியேறினார். இந்த நிலையில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்து மோசமான நிலைக்கு சென்ற நிலையில் 9வது வீரராக களமிறங்கி அதிரடி காட்டினார். கையில் போடப்பட்ட தையலோடு, கிளவுஸை வெட்டி பேட் செய்த ரோகித் அதிரடியாக 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து கடைசி வரை போராடினார்.

இதையும் படிங்க: Ind vs Ban | கடைசி ஓவரில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி! தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

ரோகித் சர்மாவின் ஆட்டத்தை ரசிகர்கள் நேற்று வெகுவாக பாராட்டி வரும் நிலையில் அவரது மனைவி பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, மனதில் தோன்றுவதை அப்படியே வெளியே சென்று செய்யும் உனக்குள் இருக்கும் மனிதனை பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: India captain Rohit Sharma, India vs Bangladesh, Rohit sharma