'அவுட்டா இது?' அம்பயர் முடிவால் விரக்தியடைந்த ரோஹித் சர்மா மனைவி - வீடியோ

ICC World Cup 2019 | India vs West Indies | Rohit Sharma | ரோஹித் சர்மாவிற்கு அவுட் கொடுத்ததால் மைதானத்தில் போட்டியை ரசித்த அவரது மனைவி அதிர்ச்சியில் புலம்பினார்.

Vijay R | news18
Updated: June 27, 2019, 8:06 PM IST
'அவுட்டா இது?' அம்பயர் முடிவால் விரக்தியடைந்த ரோஹித் சர்மா மனைவி - வீடியோ
INDvWI
Vijay R | news18
Updated: June 27, 2019, 8:06 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஹிட் மேன் ரோஹித் சர்மாவிற்கு சர்ச்சைக்குள்ளான விதத்தில் அவுட் கொடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

உலகக் கோப்பைத் தொடரின் 34-வது லீக் போட்டியில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினார். இந்திய அணி 29 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா, மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் ரோச் பந்தை எதிர்கொண்டார். ரோச் வீசிய பந்து ரோகித் சர்மாவின் பேட்டில் உரசியது போன்ற சத்தம் வந்ததால் அவுட் கேட்கப்பட்டது. அதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் மேற்கிந்திய அணி சார்பில் ரி-வியூ கோரப்பட்டது.
மூன்றாவது நடுவரான மைக்கேல் காஃப்  ரி-வியூவை சரிபார்த்தார். அப்போது பந்து ரோகித் சர்மாவின் பேட்டிற்கும், காலில் அணிந்திருந்த பேடுக்கும் நடுவே சென்றததால் குழப்பம் ஏற்பட்டது. பந்து முதலில் பேட்டில் உரசியதா அல்லது பேடில் உரசியதா என சந்தேகம் எழுந்தது.

ஆனால் நடுவர் சற்றும் குழப்பமின்றி அவுட் கொடுத்தார். நடுவரின் இந்த முடிவால் ரோஹித் சர்மா விரக்தியில் வெளியேறினார். ரோஹித் சர்மாவிற்கு அவுட் கொடுத்ததால் மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி ரித்திகா அதிர்ச்சியில் புலம்பினார். ரோஹித் சர்மாவின் அதிர்ச்சியான முகபாவனை நேரலையில் காட்டப்பட்ட நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Loading...
மூன்றாவது நடுவரின் இந்த மோசமான முடிவை நெட்டிசன்கள் பலர் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய அளவில் ரோஹித் சர்மா என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...