Home /News /sports /

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர்: ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யருக்கு வாய்ப்பில்லை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர்: ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யருக்கு வாய்ப்பில்லை

ரோகித் சர்மா கேப்டன்

ரோகித் சர்மா கேப்டன்

பிப்ரவரி 6-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான லிமிடெட் ஓவர்கள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷி தவான் ஆகியோர் திரும்ப உள்ளனர்.

    பிப்ரவரி 6-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான லிமிடெட் ஓவர்கள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷி தவான் ஆகியோர் திரும்ப உள்ளனர்.

    முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சர்மா தலைமையிலான தேசிய தேர்வுக் குழு, இந்த வாரம் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்ய உள்ளது. தொடை காயத்தில் இருந்து மீண்ட ரோஹித், மே.இ.தீவுகளுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் மீண்டும் அணியை வழிநடத்த வருகிறார்.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஐ கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ரோஹித் சர்மா இல்லாதது, இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலிலும் கேப்டன்சி சொதப்பலிலும், தென்னாப்பிரிக்காவில் பிரதிபலித்ததைக் கண்டோம். டெஸ்ட் தொடருக்கான அணி புறப்படுவதற்கு சற்று முன்பு ரோஹித்தின் காயம் மீண்டும் வெளிப்பட்ட நிலையில், ODI தொடருக்கு முன்னதாக வாஷிங்டனுக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது தமிழக ஆல்ரவுண்டர் குணமடைந்துள்ள நிலையில், ஜெயந்த் யாதவுக்கு பதிலாக சுந்தர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இதற்கிடையில், ஹிமாச்சல பிரதேசத்தின் முதல் விஜய் ஹசாரே டிராபி பட்டத்தில் ரிஷி தவான் மிகப்பிரமாதமாக ஆடியதால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு மீண்டும் வர உள்ளார். வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக அவர் ஒருநாள் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. ஆல்-ரவுண்டர் ஜோடியான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா தேர்வுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் ரிஷி தவானுக்குச் சாதகமாக செயல்படக்கூடும்.

    தேசிய தேர்வாளர்கள் குழு அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, இந்தத் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க முடிவு செய்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். தேர்வாளர்கள் மற்றும் துணை பயிற்சியாளர்கள் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் ஆடவைப்பதற்கான விவாதத்தை மேற்கொண்டதாக அறியப்படுகிறது. இதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்ட முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

    மேலும், தென்னாப்பிரிக்காவில் பந்து வீச்சில் மந்தமாக இருந்த புவனேஷ்வர் குமாரை தேர்வுக்குழுவினர் விடாப்பிடியாக அணியில் வைத்திருக்கிறார்களா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs west indies, Rohit sharma

    அடுத்த செய்தி