இந்திய அணி தனது கடைசி ஐசிசி உலகக் கோப்பையை 2011 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் வென்றது. அன்றிலிருந்து இந்திய அணிக்கு ஐசிசி சாம்பியன் பட்டம் கனவு இன்னும் அப்படியே இருக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்தது. 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. இந்திய அணியின் செயல்பாடு குறித்து கவலையடைந்துள்ள பிசிசிஐ, பெரிய போட்டிக்கான ஆயத்தங்களை தொடங்கியுள்ளது. உலகக் கோப்பைக்கான 20 வீரர்களை வாரியம் தேர்வு செய்துள்ளது. அணியில் தேர்வு செய்வதற்கு டெக்சா ஸ்கேன் மற்றும் யோ-யோ சோதனை அவசியமானது. இதனால் கடைசி நேரத்தில் எந்த வீரரும் களத்தில் இருந்து வெளியேற மாட்டார்கள்.
ஆனால், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், வீரர்களை தேர்வு செய்யும் பிசிசிஐ-ன் செயல்பாடுகளில் திருப்தி அடையவில்லை. உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், பயிற்சியாளர், தேர்வாளர் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றுள்ளார். தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு அணியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நம்புவீர்கள், அது ஒருபோதும் நடக்காது. ஏபிபி நியூஸிடம் பேசிய கபில், இந்திய அணி குறிப்பிட் வீரர்களை மட்டுமே நம்பி போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது. நாம் அதை உடைக்க வேண்டும். குறைந்தது 5-6 வீரர்கள் தயார் செய்ய வேண்டும். விராட் மற்றும் ரோஹித்தின் கடைசி உலகக் கோப்பை இதுவாக இருக்குமா என்று பலரும் கேள்வி கேட்கிறார்க. அவர்களால் விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன், ஆனால் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். உடற்தகுதி முக்கிய பங்கு வகிக்கும். நிறைய இளைஞர்கள் வருகிறார்கள், அவர்களுடன் போட்டியிட முடியுமா?
கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் வலுவான தூணாக விளங்கும் ரோஹித் ஷர்மாவுக்கு இந்த ஆண்டு 36 மற்றும் விராட் கோலிக்கு 35 வயதாகிறது. சில காலமாக இரு வீரர்களின் பேட்டிங்கில் இருந்தும் ரன் தொடர்ந்து வரவில்லை. இலங்கை தொடருக்கு முன் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. அதே சமயம் 36 மாதங்கள் காத்திருந்து வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி சதம் அடித்தார் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Rohit sharma, Virat Kohli