விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 கெரியர் முடிந்து விடவில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறியுள்ளார். இருவரும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ஓரங்கப்பட்ட நிலையில், சல்மான் பட் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களாக விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இருந்து வருகின்றனர். கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட இருவரில் ஒருவர் முன்னாள் கேப்டன். இன்னொருவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்துபவர்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை கவனத்தில் கொண்டு மூத்த வீரர்களுக்கு இந்த ஓய்வு அளிக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த இளம் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது.
இருப்பினும், கோலி மற்றும் ரோஹித் சர்மாவை டி20 அணியில் இருந்து நீக்கியது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் அளித்துள்ளபேட்டியில் கூறியிருப்பதாவது- இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால்தான் அவர்களுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோலி, ரோஹித் சர்மாவின் டி20 கெரியர் முடிவுக்கு வந்துவிடவில்லை. இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதே தவிர, அணியில் இருந்து அவர்கள் நீக்கப்படவில்லை. இந்திய அணிக்கு கோலி, ரோஹித்தின் பங்களிப்பு மிக அதிகம். எதிர்காலத்திலும், அணிக்கு இருவரும் பல வெற்றிகளைத் தேடித் தருவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket