இரட்டைச்சத நாயகன்... சிக்சர் அசுரன்... 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவின் 33-வது பிறந்தநாள்..!

Happy Birthday Rohit Sharma | அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா(423) 3வது இடத்தில் உள்ளார்.

இரட்டைச்சத நாயகன்... சிக்சர் அசுரன்... 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவின் 33-வது பிறந்தநாள்..!
ரோஹித் சர்மா
  • Share this:
இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் பலர் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களால் 'ஹிட்மேன்' என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ரோஹித் சர்மா. ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் சர்மா நிலைத்து நின்று ஆடிவிட்டால் அவரது அதிரடியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக சதத்தை கடந்துவிட்டால் மைதானத்தில் பவுண்டரி மழை பொழிந்து விடுவார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு முறை இரட்டை சதம் அடிப்பது என்பதே மிகப் பெரிய சவலான ஒன்று. ஜாம்பவான் சச்சின், அதிரடி மன்னன் சேவாக் உள்ளிட்டோர் தங்களது வரலாற்றில் ஒரு முறையே இரட்டை சதம் அடித்துள்ளனர். அதுவும் அவர்களது கிரிக்கெட் சரித்தரித்தில் கடைசி தருணத்தில் தான் அவர்களால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது.


ஆனால் ஹிட்மேன் இதுவரை 3 இரட்டை சதங்களை அசல்ட்டாக அடித்து யாரும் எட்டா முடியாத சாதனையின் உச்சத்தில் உள்ளார். உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோஹித் சர்மா தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 2013-ம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

அதற்கு அடுத்ததாக அடித்த 2 இரட்டை சதங்களும் இலங்கை அணிக்கு எதிரானது. கொல்கத்தாவில் 2014-ம் ஆண்டு இலங்கை எதிரான போட்டியில் ரோஹித் ருத்ரதாண்டவம் ஆடி இருப்பார். அந்தப் போட்டியில் 173 பந்துகளை சந்தித்த ரோஹித் 264 ரன்கள் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

இதற்கு முன் இப்படியொரு அதிரடி ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் யாருமே விளையாடி இருக்காமாட்டார்கள். 33 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் விளாசி இலங்கை பந்துவீச்சாளர்களை சிதைத்திருப்பார் ரோஹித். அதற்கடுத்து 2017-ம் ஆண்டு மொஹாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 208 ரன்கள் விளாசினார்.சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா(423) 3வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கெய்ல் 534 சிக்ஸர்கள் மற்றும் அஃப்ரிடி 476 சிக்சர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு மேட்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் ரோஹித் வசமே உள்ளது. கடந்த ஆண்டு விசாகாப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 13 சிக்சர்களும், 2013 பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 16 சிக்சர்களும், இந்தூரில் 2017ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 10 சிக்சர்களும் விளாசி சாதனை படைத்துள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ரோஹித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் உள்ள விராட் கோலியை விட 14 புள்ளிகளே பின்தங்கி உள்ளார். இந்தியாவை பல போட்டிகளில் வெற்றியடைய வைத்த ஹிட்மேன்க்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.First published: April 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading