இந்திய அணியின் ஹிட்மேன் ரோகித் சர்மா, தன்னுடைய செல்ல மகளைப் பார்த்துக்கொள்ள ஆள் தேவை என ட்விட்டரில் ரிஷப் பண்டை கிண்டல் செய்துள்ளார்.
அண்மையில், மெல்போர்ன் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான டிம் பெய்னும், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தனர்.

ஆஸி. கேப்டன் டிம் பெய்னைக் கிண்டல் செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். (Video Grab)
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும்போது, “தோனி வந்ததும் ஒரு நாள் அணியில் இருந்து உன்னை நீக்கிவிட்டார்கள். எனது குழந்தையை பார்த்துக் கொள்கிறாயா? நானும் எனது மனைவியும் படம் பார்க்க செல்ல வேண்டும்” என டிம் பெய்ன் கிண்டல் செய்தார்.
இந்த நிகழ்வு நடந்து சில நாட்களுக்குப் பின், தனது குழந்தையை பார்த்துக் கொள்கிறாயா என டிம் பெய்ன் கூறிய சவாலை ரிஷப் பண்ட் ஏற்றார். டிம் பெய்னின் குழந்தையை ரிஷப் பண்ட் கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த புகைப்படத்தில் டிம் பெய்னின் மனைவி ஒரு குழந்தையை வைத்திருந்தார். இன்னொரு குழந்தையை ரிஷப் பண்ட் தூக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் ஹிட்மேன் ரோகித் சர்மா, தன்னுடைய செல்ல மகளைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை என ட்விட்டரில் ரிஷப் பண்டை டேக் செய்து கிண்டல் செய்துள்ளார்.
அதில், “காலை வணக்கம் நண்பா. நீங்கள் ஒரு நல்ல குழந்தை பராமரிப்பாளர் என கேள்விப்பட்டேன். இப்போது எனக்கு ஒரு ஆள் வேண்டும். நீங்கள் எனது குழந்தையை (சமைரா) பார்த்துக் கொண்டால் எனது மனைவி ரித்திகா மகிழ்ச்சியாக இருப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட், “சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அவரது வேலையை சரியாகச் செய்யவில்லை. அவர் சமைரா-வை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வார். வாழ்த்துக்கள் ரித்திகா” என தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.