Home /News /sports /

உடல் நலம் தேறிவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா- முதல் டி20-யில் ஆடுவது உறுதி

உடல் நலம் தேறிவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா- முதல் டி20-யில் ஆடுவது உறுதி

ஹிட்மேன் ரோஹித் சர்மா

ஹிட்மேன் ரோஹித் சர்மா

கோவிட்-19 நெகெட்டிவ் ரிசல்ட் வந்ததால் தனிமையிலிருந்து வெளியே வந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இதனையடுத்து சவுத்தாம்ப்டனில் ஜூலை 7ம் தேதி தொடங்கும் முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக ஆடுகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்கவும் ...

    ஹர்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்துக்கு எதிராக தொடரை வென்றது இந்திய அணி. இப்போது இங்கிலாந்தில் கவுண்டி அணிகளான டெர்பி ஷயர் மற்றும் நார்த்தாம்ப்டன் ஷயர் அணிகளுடன் தினேஷ் கார்த்திக் தலைமையில் டூர் மேட்ச் டி20-யில் வென்றது இந்திய அணி.

    மருத்துவ நடைமுறைகளின் படி ரோஹித் சர்மா கோவிட்டுக்குப் பிறகான நுரையீரல் திறன் பற்றி அறிவதற்கான இருதய ரட்த நாள பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

    தற்போது நடைபெற்று வரும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மாவுக்கு 3 முறை கோவிட் பாசிட்டிவ் ஆனது .

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஆட, 2வது போட்டிக்கு கோலி, பும்ரா, பண்ட், ஜடேஜா ஆகியோர் அணிக்குத் திரும்புகின்றனர்.

    ஜூலை 7ம் தேதி முதல் டி20, ஜூலை 5ம் தேதி நாளை டெஸ்ட் முடிகிறது. டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கின்றது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Rohit sharma, T20

    அடுத்த செய்தி