ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோல்வியின் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மா : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தோல்வியின் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மா : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

கண்ணீர் விட்ட ரோகித் சர்மா

கண்ணீர் விட்ட ரோகித் சர்மா

T20 World Cup | இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில் போட்டி முடிந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கண்ணீர்விடும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில்  முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

    இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. அடிலெய்ட்டில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

    இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இந்தி அணியின் பந்துவீச்சை நால பக்கமும் பறக்கவிட்டனர். இந்திய அணி ஒரு விக்கடெ் கூட எடுக்க முடியாமல் திணறியது.

    இதையும் படிங்க: சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதி பிரிவு? விவாகரத்து பெற்றதாகவும் தகவல்

    ஜோஸ் பட்லார் மற்றும் அலக்ஸ் அரைசதம் கடந்தும் அதிரடியை கைவிடவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ரன்கள் குவித்தனர். இதையடுத்து வரும் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

    இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சு முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில், போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் மிகவும் சோர்வாகவே இருந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தோல்வியின் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India Vs England, Rohit sharma, T20 World Cup