இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த அண்டு 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டம்புகளைத் தெறிக்கவிட்ட போல்ட்: பேர்ஸ்டோவின் சேவாக் பாணி காட்டடி சதம்- இங்கிலாந்து 265/6
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது அணி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.சி.ஐ. மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்’ என பதிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக வீரர் அஸ்வின் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இங்கிலாந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ரோகித் சர்மாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.