டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - அதுல் வாசன்

Rohit Sharma | டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டுமென முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - அதுல் வாசன்
ரோஹித் சர்மா
  • Share this:
2019 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணிக்கு இரட்டை கேப்டன் முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியும் டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவும் கேப்டனாக செயல்பட வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்திய அணிக்கு இரட்டை கேப்டன்கள் நியமனம் குறித்து பிசிசிஐ சிந்திக்க வேண்டும். இதன் மூலம் கோலியின் பணிச்சுமை குறையும். ஆனால் கோலி இந்த சுமையை விரும்புகிறார்.

ரோஹித் சர்மா பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டி20 போட்டிகளில் அவர் சிறந்த கேப்டன் என்பதற்கு ஐ.பி.எல் ஒரு உதாரணம். ஐ.பி.எல் தொடரில் 4 முறை கோப்பை வென்றுள்ளார். ஆனால் கோலி ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. டி20 போட்டிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் கோலிக்கு தான் சுமை குறையும்“ என்றுள்ளார்.







First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading