இந்தியாவின் டி20 அணிக்கான கேப்டன்ஷிப் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யாவிடம் ரோஹித் சர்மா ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்ததால், கடும் விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக தேர்வுக்குழு கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இதைத் தொடர்ந்து வங்க தேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்கள் கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
டி20-க்கான அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி இலங்கை தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து டி20க்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை நிரந்தரமாக பாண்ட்யாவுக்கு அளிக்க வேண்டும் என்ற கமென்ட்டுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான அஜய் ஜடேஜா கூறியதாவது- இளம் வீரர்களை ஹர்திக் பாண்ட்யா சரியாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக உம்ரான் மாலிக்கை பாண்ட்யாதான் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். ரோஹித் சர்மா மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரம், மகேந்திர சிங் தோனி எப்படி டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்தாரோ, அதேபோன்று ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை பாண்ட்யாவிடம் ஒப்படைக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு சூர்ய குமார் யாதவ் ரீப்ளே… வைரலாகும் க்யூட் ரியாக்ஷன்
கடந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக பங்கேற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார்.
அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Hardik Pandya, Rohit sharma