Rohit Sharma: விலையுயர்ந்த பங்களாவை நஷ்டத்துக்கு விற்பனை செய்த ரோகித் சர்மா..! காரணம் என்ன?

ரோகித் சர்மா,

மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்தினருடன் ரோகித் சர்மா தற்போது வசித்து வருகிறார்.

  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா, அவருக்கு சொந்தமாக மலைவாசஸ்தலத்தில் இருக்கும் விலையுயர்ந்த ஆடம்பரமான பங்களாவை நஷ்ட விலைக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்தியாவின் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளின் துணைக் கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருபவர் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா. ரசிகர்கள் இவரை ‘ஹிட் மேன்’ என செல்லமாக அழைக்கின்றனர்.

மகாராஷ்டிராவின் லூனாவாலா எனும் மலைப்பகுதியில் ரோகித் சர்மா ஆடம்பர பங்களா ஒன்றை சொந்தமாக வைத்திருந்தார். 6329 சதர அடி பரப்பிலான இந்த சொகுசு பங்களாவை கடந்த 2016ம் ஆண்டு 6 கோடி ரூபாய்க்கு ரோகித் வாங்கியிருந்தார்.

Also Read:   'ஊருக்கு தான் உபதேசம்..' நவ்ஜோத் சிங் சித்து செய்த காரியத்தால் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு!

மும்பை மற்றும் புனேவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், பிரபலங்கள் பொழுதை சுகமாக கழிப்பதற்காக லூனாவாலாவில் இரண்டாவதாக ஒரு வீட்டினை அமைத்துள்ளனர். இது நமது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலமாகும்.

ரோகித் சர்மா,


இந்நிலையில், லூனாவாலாவில் உள்ள அவரது சொகுசு பங்களாவை ரோகித் சர்மா திடீரென விற்பனை செய்திருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன் 6 கோடி ரூபாய் வாங்கிய பங்களாவை அவர் 5.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு 75 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை எப்போதும் உச்சத்தில் உள்ள லூனாவாலாவில் ரோகித் சர்மா நஷ்டத்துக்கு பங்களாவை விற்பனை செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read:   குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வாக்குறுதியால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!

squarefeatindia.com என்ற ரியல் எஸ்டேட் தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்படி, மும்பையைச் சேர்ந்த சுஷ்மா அசோக் சரஃப் என்பவர் ரோகித் சர்மாவின் பங்களாவை வாங்கியுள்ளார். இதற்காக கடந்த ஜூன் 1ம் தேதி 26.25 ரூபாயை அவர் முத்திரைத் தாள் கட்டணமாக செலுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 34 வயதாகும் ரோகித் சர்மா, விளையாட்டின் மூலம் அதிகம் சம்பாதிப்பவராக விளங்கி வருகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் அவர் இந்திய அணியின் ஏ+ சம்பள பட்டியலில் இருக்கிறார், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே 15 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்தினருடன் ரோகித் சர்மா தற்போது வசித்து வருகிறார். அடுத்த மாதம் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் அவர் களம் இறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: