விமானத்தில் ஷிகர் தவானின் விநோத செயல்... வீடியோ எடுத்து வெளியிட்ட ரோஹித் சர்மா

விமானத்தில் ஷிகர் தவானின் விநோத செயல்...  வீடியோ எடுத்து வெளியிட்ட ரோஹித் சர்மா
  • News18
  • Last Updated: September 21, 2019, 4:57 PM IST
  • Share this:
பெங்களூரு டி20 போட்டிக்கு விமானத்தில் செல்லும் போது ஷிகர் தவானின் நடவடிக்கையை, வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மா பதிவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தவான் மற்றும் கோலி இணைந்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்திருந்தனர். மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பெங்களூருவில் நடக்க உள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் பெங்களூருக்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமானத்தில் ஷிகர் தவான் தனக்குத்தானே பேசும் வீடியோ ஒன்றை ரோஹித் சர்மா எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


"இல்லை, அவர் என்னிடம் பேசவில்லை! கற்பனை நண்பர் வைத்துக்கொள்ளும் வயதும் கடந்து விட்டது" என்ற தலைப்புடன் இந்த வீடியோவை ரோஹித் சர்மா பதிவிட்டுருந்தார்.
"அவர் வீடியோ எடுத்தபோது, நான் கவிதை படித்து கொண்டிருந்தேன். நான் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்து கொண்டிருந்தேன். அத்தகைய ஆர்வத்துடன் நானும் படித்திருக்கலாம் என்று விரும்புகிறேன்," என்று ஷிகர் தவான் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளார். யுவ்ராஜ் சிங்கும் இந்த வீடியோவுக்கு சிரிக்கும் எமோஜிகளை பதிவிட்டுள்ளார். 

Also See...

மணமேடையில் மணமகனால் குப்புற கவிழ்ந்த மணமகள்... அதிர்ச்சியடைந்த உறவினர்கள்... வைரலாகும் வீடியோ

Video | இரண்டு பெண் எம்.பி.க்களின் அழகான நடனம்!

 
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading