25 ஆண்டுக்கால சாதனையை தகர்த்த 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா!

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 154 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடித்த 4-வது சதம் இதுவாகும்

டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா முதல் இன்னிங்சில் 6 சிக்சர்களும், 2வது இன்னிங்சில் 7 சிக்சர்களும் விளாசி சித்துவின் 25 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துள்ளார்.

  • Share this:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சித்துவின் 25 ஆண்டுக்கால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடி இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் அஸ்வின் சுழலில் சிக்கி தடுமாறினர். இறுதியாக முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 7 ரன்களில் அவுட்டாகினார். ரோஹித் சர்மாவும், புஜாராவும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை துவம்சம் செய்த ரோஹித் சர்மா 127 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Also Watch : கிரிக்கெட் ஜாம்பவான்களின் வரலாற்று சாதனையை முறியடித்த ரவிந்திர ஜடேஜா!

இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா முதல் இன்னிங்சில் 6 சிக்சர்களும், 2வது இன்னிங்சில் 7 சிக்சர்களும் விளாசி சித்துவின் 25 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துள்ளார்.

கடந்த 1994ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சித்து 8 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது ரோஹித் 13 சிக்சர்கள் விளாசி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹேடன், இந்திய வீரர்களான சேவாக், ஹர்பஜன் சிங், ரஹானே (தலா 7 சிக்சர்கள்) ஆகியோர் 3வது இடத்தில் உள்ளனர்.

Also Watch

Published by:Vijay R
First published: