ஐசிசி டி20 தரவரிசை: இந்தியா நம்பர் 1-ல் நீடிக்கிறது
ஐசிசி டி20 தரவரிசை: இந்தியா நம்பர் 1-ல் நீடிக்கிறது
இந்திய அணி
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் 270 ரேட்டிங்குடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் 270 ரேட்டிங்குடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் தோல்வி அடையவில்லை. இதன் காரணத்தால் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
2-வது இடத்தில் இங்கிலாந்து அணியும், 3-வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 6,336 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 5-வது இடத்தில் உள்ளது.
🔹 Top spot retained
🔹 Changes in the No.4, 5, 6 spots
🔹 Number of ranked teams reduced
அதே நேரத்தில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 2ம் இடம் வகிக்கிறது.
T20I இல் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது, இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தை விட இருந்து 5 புள்ளிகள் கூடுதல் பெற்றுள்ளது. . தற்போது 6வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் பின்னுக்குத் தள்ளியுள்ளன. அதேபோன்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் ஆப்கானிஸ்தானை விட (10வது இடம்) தற்போது முன்னிலையில் உள்ளன.
டி20 வீரர்கள் தரவரிசையில் பாபர் அசாம் முதலிடம். அய்டன் மார்க்ரம், ரிஸ்வான், மலான் டெவன் கான்வே, பிஞ்ச், ரசி வான் டெர் டசன், கப்தில், பதும் நிசாங்கா 9-ம் இடம். லோகேஷ் ராகுல் மட்டுமே டாப் 10-ல் 10ம் இடத்தில் இருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.