Home /News /sports /

ராகவேந்திராவின் த்ரோ டவுன் பயிற்சியில் ரோகித் சர்மா சீரியஸ் காயம்: ஒருநாள் தொடருக்கும் சந்தேகம்

ராகவேந்திராவின் த்ரோ டவுன் பயிற்சியில் ரோகித் சர்மா சீரியஸ் காயம்: ஒருநாள் தொடருக்கும் சந்தேகம்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

கையில் அடிப்பட்ட இந்தக் காயத்தோடு ரோகித் சர்மாவுக்கு முழங்கால் பின் தசைநார் பிரச்சனைகளும் இருக்கின்றன, இது சரியாவதற்கு குறைந்தது 1 மாதமாவது ஆகும்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய டெஸ்ட் துணைக் கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக பிரியங்க் பஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரோகித் சர்மா காயமடைந்ததையடுத்து ஸ்டாண்ட்-இன் துணைக்கேப்டனை பிசிசிஐ அறிவிக்கவில்லை, காரணம் ரகானே அணியில் இருப்பதே கடினம் என்ற நிலையை அடுத்து அவரை வைஸ் கேப்டனாக அறிவிக்க முடியாது, ஆனால் இப்போது ரோகித் சர்மா இல்லை என்பதால் ரகானேவுக்கு ஆடும் 11 வீரர்களில் வாய்ப்பு கிடைக்கும் என்றே கருதப்படுகிறது.

    இதனையடுத்து வைஸ் கேப்டன் பொறுப்புக்கு ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், அஸ்வின் பெயர்கள் பரிசீலிக்கப்படலாம் என்று தெரிகிறது. தென் ஆப்பிரிக்கா தொடருக்காக மும்பையில் இந்திய அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தது, அப்போது ராகவேந்திரா என்கிற ரகு த்ரோ டவுன் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார், இதில் ரோகித் சர்மா காயமடைந்தார் என்றும் காயம் கொஞ்சம் சீரியஸ் டைப் என்றும் கூறப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் ஜனவரி 15ம் தேதி முடிவடைந்து ஒருநாள் தொடர் தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மா ஃபிட் ஆகி வருவாரா என்பது ஐயமாகி உள்ளது. ஆனால் டெஸ்ட் தொடருக்கு மட்டும்தான் இல்லை என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஆடுவது இப்போது வரை சந்தேகமில்லை என்றாலும் காயத்தின் தன்மை சீரியஸ் என்பதால் ஒருநாள் தொடருக்கும் சந்தேகம் என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கையில் அடிப்பட்ட இந்தக் காயத்தோடு ரோகித் சர்மாவுக்கு முழங்கால் பின் தசைநார் பிரச்சனைகளும் இருக்கின்றன, இது சரியாவதற்கு குறைந்தது 1 மாதமாவது ஆகும்.

    இந்நிலையில் பிரியங்க் பஞ்சல் மாற்று தொடக்க வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார், அவர் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் 96 ரன்களை சில நாட்களுக்கு முன்பாக அடித்தார். பஞ்சல் 100 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ளார். 7011 ரன்களை 24 சதங்களுடன் எடுத்துள்ளார் பஞ்சல். பார்த்திவ் படேல் தலைமையில் குஜராத் அணி ரஞ்சி டிராபியை வென்ற அணியில் பிரியங்க் பஞ்சல்தான் சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.

    Also Read: Year Ender 2021: 2021-ம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் அணி - ஆகாஷ் சோப்ரா தேர்வில் கோலி, ஸ்மித் இல்லை

    ரிசர்வ் ஓபனராக ஏற்கெனவே அபிமன்யு ஈஸ்வரன் என்பவர் இருக்கிறார். இவர் தென் ஆப்பிரிக்கா ஏ தொடரில் 3ம் நிலையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Rohit sharma

    அடுத்த செய்தி