கிரிக்கெட் வரலாற்றில் 80 ஆண்டுகளுக்கு பின் ரோஹித் சர்மா நிகழ்த்திய ரெக்கார்ட்!

ரோஹித் சர்மா

. தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் பந்துவீச்சில் 2 இன்னிங்சிலும் டி-காக் அவரை ஸ்டெம்பிங் செய்தார்.

  • Share this:
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா கிரிக்கெட் வரலாற்றில் 80 ஆண்டுகளுக்கு பின் வித்தியாசமான சாதனை ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா முதன்முறையாக களமிறங்கி 2 இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் பல பெருமைகளை பெற்ற ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றையும் பதிவுசெய்துள்ளார்.

ரோஹித் சர்மா 2 இன்னிங்சிலும் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டாகி உள்ளார். தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் பந்துவீச்சில் 2 இன்னிங்சிலும் டி-காக் அவரை ஸ்டெம்பிங் செய்தார். இதன் மூலம் 2 இன்னிங்சிலும் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா தான்.கிரிக்கெட் வரலாற்றில் 22வது வீரராக ரோஹித் சர்மா இந்த முறையில் அவுட்டாகி உள்ளார். கடைசியாக 1939ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹம்மண்ட் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டாகி இருந்தார்.

சரியாக 80 ஆண்டுகளுக்கு பின் 2 இன்னிங்சிலும் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Also Watch 

Published by:Vijay R
First published: