நான் அடுத்த தோனியா..? சுரேஷ் ரெய்னாவின் கருத்துக்கு பதிலளித்த ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா - மகேந்திர சிங் தோனி

தோனி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் தலைமையிலும் சுரேஷ் ரெய்னா விளையாடி உள்ளார்.

 • Share this:
  சுரேஷ் ரெய்னா கருத்துக்கு இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

  இந்திய அணிக்கு ஐசிசி-ன் 3 விதமான உலகக் கோப்பையை பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் மகந்திர சிங் தோனி. 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தாலும் அவர் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது.

  மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் கொரோனா காரணமாக தற்போது செப்டம்பர் 18-ம் தேதி தொடங்க உள்ளது. ஐ.பி.எல் தொடரில் தோனியின் ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

  இதனிடையே இந்திய அணியின் அடுத்த தோனி ரோஹித் சர்மா என்று சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். ரெய்னா, தோனி தலைமையில் ஐ.பி.எல் தொடரையும், ரோஹித் சர்மா தலைமையில் 2018 நிடாஷ் கோப்பை தொடரிலும் விளையாடி உள்ளார்.

  “நான் அவரை பார்த்துள்ளேன். அவர் அமைதியாக இருப்பார், கற்றுக்கொள்வதில் அவருக்கு ஆர்வம் உள்ளது. வீரர்களுக்கு நம்பிக்கை தரும்விதமாக அவர்களுக்கு அறிவுரை வழங்குவார். கேப்டனாக முன்நின்று வழிநடத்துபவர்கள், டிரெஸ்ங் ரூமிலும் மரிதையாக நடந்து கொள்வது நல்ல சூழலை ஏற்படுத்தும். இவை அனைத்தும் ரோஹித் சர்மாவிடம் உள்ளது“ என்று ரெய்னா தெரிவித்திருந்தார்.

  ரெய்னாவின் இந்த கருத்திற்கு ரோஹித் சர்மா ட்விட்டர் நேரலையில் பதிலளித்துள்ளார். அதில், “சுரேஷ் ரெய்னாவின் கருத்தை நானும் பார்த்தேன். தோனி மிகவும் அமைதியானவர், அவரை போல யாரும் இருக்க முடியாது. ஒருவருடன் மற்றொருவரை ஒப்பீடு செய்வதை நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தனது தனித்துவத்தால் பலம் மற்றும் பலவீனங்களை பெற்றவர்களாக இருப்பார்கள்“ என்றார்.
  Published by:Vijay R
  First published: