முகப்பு /செய்தி /விளையாட்டு / ''என்ன இப்படி ஆகிடுச்சு” ஜடேஜா விக்கெட்டை பார்த்து கடுப்பான ரோகித் சர்மா!

''என்ன இப்படி ஆகிடுச்சு” ஜடேஜா விக்கெட்டை பார்த்து கடுப்பான ரோகித் சர்மா!

ஜடேஜா - ரோகித் சர்மா

ஜடேஜா - ரோகித் சர்மா

Rohit Sharma Shocking Video | இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சிஸ் ஆட்டமிழந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Indore, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா கேட்ச் கொடுத்து அவுட் ஆனாதை பார்த்து கேப்டன் ரோகித் சர்மா அதிர்ச்சியடையும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பின் தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கியது. இந்திய அணியின் தொடர்ந்து சொதப்பி வந்த கே.எல்.ராகுல் இந்த போட்டியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன்கில் களம் இறங்கினர். குனேமேன் வீசிய 6வது ஓவரில் ரோகித் சர்மா (12 ரன்) ஸ்டம்பிங் ஆனார். அடுத்த புஜாரா களம் வந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 21 ரன்னில் அவுட் ஆனார்.

இந்தூர் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்த நிலையில் பந்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது.  மோசமான பேட்டிங் சொதப்பலால் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் முதல் இன்னிங்சிஸ் ஆட்டமிழந்தது.

Also Read : வாரே வா.. இது அஸ்வின் சம்பவம்.. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ரவிச்சந்திர அஸ்வின்!

11வது ஓவரை சுழல்பந்து வீச்சாளர் லயான் வீசினார் அப்போழுது பேட்டிங் செய்த ஜடேஜாவை எல்பிடபிள்யூக்கு முறையிட்டார் அதற்கு நடுவர் அவுட் கொடுத்தார். இதனை எதிர்த்து ஜடேஜா DRS க்கு சென்றார். அதில் பேட்டில் பந்து பட்டதை அல்ட்ரா-எட்ஜ் ஒரு ஸ்பைக்கைக் காட்டியதால் நாட் -ஆவுடாக அறிவிக்கப்பட்டது. இதனால் டிரசிங் ரூமில் இருந்த இந்திய அணி வீரர்களும் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் இந்த நிம்மதி சிறிது காலம் கூட நிலைக்கவில்லை, லயான் வீசிய அடுத்த பந்திலே ஜடேஜா ஆப் சைடு ஷாட் அடித்து குஹ்னேமானின் கைக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினர். இதனை பார்த்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிர்ச்சியாக பார்த்து சோர்ந்து போனார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: India captain Rohit Sharma, India vs Australia, Ravindra jadeja, Viral Video