ரோஹித் சர்மா டக் அவுட்... ஓபனிங் கனவு பலிக்குமா...?

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறங்க இந்திய அணி திட்டமிட்டு வருகிறது.

ரோஹித் சர்மா டக் அவுட்... ஓபனிங் கனவு பலிக்குமா...?
ரோஹித் சர்மா
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2019, 2:43 PM IST
  • Share this:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரோஹித் சர்மா டக்அவுட்டாகி உள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதி விசாகாப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதான பயிற்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. முதல் நாள் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது. 2ம் நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக தாமதமாக தொடங்கியது.


முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்த போது டிக்ளர் செய்தது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறங்க இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. இதற்காக பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கினார். ஆனால் ரோஹித் சர்மாக 2வது பந்திலேயே பிளாண்டர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார்.

ரோஹித் சர்மா டக்அவுட்டாகி வெளியேறதை அடுத்து அவர் இந்திய டெஸ்ட் அணியில் களமிறங்குவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

Loading...

Also Watch

First published: September 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...