Home /News /sports /

India vs West Indies: ரோஹித் சர்மா ஆல் டைம் கிரேட்- இயன் பிஷப் புகழாரம்

India vs West Indies: ரோஹித் சர்மா ஆல் டைம் கிரேட்- இயன் பிஷப் புகழாரம்

ரோகித் சர்மா கேப்டன்

ரோகித் சர்மா கேப்டன்

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை மே.இ.தீவுகள் முன்னாள் பவுலரும் தற்போதைய வர்ணனையாளருமான இயன் பிஷப் ஒருநாள் போட்டிகளில் ‘ஆல்டைம் கிரேட்களில் ஒருவர்’ என்று வர்ணித்துப் புகழ்ந்துள்ளார்.

    தொடை காயத்தில் இருந்து மீண்ட பிறகு, ரோஹித் சர்மா 51 பந்துகளில் 60 ரன்களை விளாசினார், இந்தியா 28 ஓவர்களில் மொத்தம் 176 ரன்களைத் விரட்டி மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் வென்றது. ஆயிரமாவது ஒருநாள் போட்டியான அதில் இந்தியா வென்றுள்ளது. இதனையடுத்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை மே.இ.தீவுகள் முன்னாள் பவுலரும் தற்போதைய வர்ணனையாளருமான இயன் பிஷப் ஒருநாள் போட்டிகளில் ‘ஆல்டைம் கிரேட்களில் ஒருவர்’ என்று வர்ணித்துப் புகழ்ந்துள்ளார்.

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ODI வடிவத்தில் வழக்கமான கேப்டனாக அவரது முதல் போட்டி இது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ரோஹித் 60 ரன்கள் எடுத்ததற்காக பிஷப் அவரைப் பாராட்டினார், மேலும் அவரது இன்னிங்ஸ் அவரை ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஒரு ஆகச்சிறந்த பேட்டர் என்று உயர்வாகப் பேச வைக்கிறது என்றார்.

    இயன் பிஷப் கூறும்போது, “இப்போதெல்லாம் ரோஹித் ஷர்மா இப்படியாடுவது வழக்க்மா அவரது டைமிங் சிறப்பாகவும் சமநிலையாகவும் இருந்தது. நாங்கள் சொல்லக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், அவர் நீண்ட காலமாக சுறுசுறுப்பான கிரிக்கெட்டில் இருந்து விலகி, திரும்பி வந்து இப்படி விளையாடுவது ஒரு உயர்ந்த தரமான வீரருக்கான தன்மை. என்னை ஆச்சரியப்படுத்தியது இதுதான். ஆனால் உண்மையில், பல ஆண்டுகளாக அவரைப் பார்த்ததில் அவர் ஒரு சிறந்த வீரர், இந்த வடிவத்தில் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர் என்று கருதுகிறேன்” என்றார்.

    ரோஹித் சர்மா கூறும்போது, “நான் சிறிது காலம் ஓய்வில் இருந்தேன், இரண்டு மாதங்கள் விளையாடவில்லை, ஆனால் நான் பந்துகளை நன்றாக அடித்து என் பாணிக்குத் திரும்பினேன். ஒரு நீண்ட சீசன் முன்னால் உள்ளது என்பது தெரியும். இங்கே ஒரு நல்ல நெட் செஷன் கிடைத்தது. . இந்த ஆட்டத்தில் நான் உறுதியாக இருந்தேன். இந்த இன்னிங்ஸ் மூலம் நிறைய தன்னம்பிக்கைகளைப் பெறுகிறேன்” என்றார்.

    நேற்றைய ஆட்டத்தில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளை 7 விக்கெட்டுக்கு 79 ரன்களாகக் குறைத்தது, ஆனால் ஜேசன் ஹோல்டர் (71 பந்தில் 57), ஃபேபியன் ஆலன் (43 பந்தில் 29) ஆகியோர் அணியை 43.5 ஓவரில் 176 ரன்களுக்கு உயர்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் விராட் கோலி ஏமாற்றமளிக்க ரோகித் சிறப்பாக ஆடியதில் இந்திய அணி எளிதில் விரட்டி வெற்றி பெற்றது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ind vs WI ODI, India vs west indies, Rohit sharma

    அடுத்த செய்தி