கோலியின் சாதனையை முறியடிக்க ரோகித்துக்கு வாய்ப்பு!

#RohitSharma on verge of surpassing Virat Kohli to create MAJOR record in T20Is | ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி, 12 டி-20 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கோலியின் சாதனையை முறியடிக்க ரோகித்துக்கு வாய்ப்பு!
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி.
  • News18
  • Last Updated: February 5, 2019, 3:31 PM IST
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் கேப்டன் விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. நேற்றுடன் (பிப்.3) முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதித்தது.

இதனை அடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


Rohit Sharma, Dhoni, தோனி, ரோகித் சர்மா
மைதானத்தில் தோனி உடன் ரோகித் சர்மா. (BCCI)


இந்நிலையில், குறைந்த ஓவர்கள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றி பெற்றுக்கொடுத்த பட்டியலில் கோலியை பின்னுக்குத்தள்ள இருக்கிறார் ரோகித் சர்மா. 31 வயதான ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி, 12 டி-20 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி, 20 டி-20 போட்டிகளில் விளையாடி 12-ல் வெற்றி, 7-ல் தோல்வி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை. இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தோனி. அவர் தலைமையில் இந்திய அணி, 72 போட்டிகளில் விளையாடி 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தோனியின் வெற்றி சதவீதம் 59.28.
Rohit Sharma, ரோகித் சர்மா
ரோகித் சர்மா புதிய சாதனை. (BCCI)


ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதம் 91.66. விராட் கோலியின் வெற்றி சதவீதம் 63.15. விரேந்திர சேவாக் (ஒரு போட்டி) மற்றும் சுரேஷ் ரெய்னா (3 போட்டிகள்) ஆகியோர் வெற்றி சதவீதம் 100-ஆக உள்ளதும் குறிப்பிடதக்கது.

தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரீஸைத் தாண்டாதீர்கள்: ஐசிசி ஃப்ரீ அட்வைஸ்!

Also Watch...

First published: February 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்