ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார்’ – பிசிசிஐ அறிவிப்பு

‘வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார்’ – பிசிசிஐ அறிவிப்பு

பயிற்சியாளர் டிராவிட்டுடன் ரோகித் சர்மா

பயிற்சியாளர் டிராவிட்டுடன் ரோகித் சர்மா

ரோகித் சர்மா காயம் முழுமையாக குணம் அடைய மேலும் சில நாட்களுக்கு ஓய்வு தேவை என மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது காயம் அடைந்தார். இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட ரோகித், கடைசி நேரத்தில் களத்தில் இறங்கி அணியின் வெற்றிக்காக போராடினார்.

இந்த போட்டியில் 28 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை தவற விட்டது. அடுத்து நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் பங்கேற்கவில்லை.

IPL 2023 AUCTION : ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் ஐ.பி.எல். அணிகள்…

கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடரை இழந்தாலும் இந்திய அணி மிகச்சிறிய வித்தியாசத்தில்தான் இரு ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தது.

தற்போது மும்பையில் ரோகித் சர்மா காயத்திற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

2ஆவது ஒருநாள் போட்டியில் காயத்துடன் ரோகித் வெளியேறி இருந்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும், அதன் பின்னரும் அவர் விளையாடியதால் கொஞ்சம் சீரியஸான காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக். வீழ்த்திய இளம் வீரர்… இங்கிலாந்தின் ரெஹான் அகமது சாதனை

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டிலும் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணம் அடைவதற்கு மேலும் சில நாட்களுக்கு ஓய்வு தேவை என மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளது. எனவே ரோகித் சர்மா ஓய்வில் இருப்பார். வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார்.

அடிவயிற்றில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நவ்தீப் சைனியும் போட்டியில் பங்கேற்க மாட்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: BCCI, Rohit sharma