முக்கியமான சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா!

#RohitSharma misses out on #SureshRaina’s long-standing #IPLrecord | மும்பை அணிக்காக 133 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடியுள்ளார்.

முக்கியமான சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா!
ரோகித் சர்மா.
  • News18
  • Last Updated: April 11, 2019, 1:14 PM IST
  • Share this:
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா விலகியதால் முக்கியமான சாதனையை தவறவிட்டார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி கே.எல்.ராகுல் (100). கிறிஸ் கெய்ல் (63) ஆகியோரின் அதிரடியால் 197 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி, பொல்லார்டின் (83) ருத்ரதாண்டவத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.


mumbai indians, IPL
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி. (BCCI)


இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் தொடர்ச்சியாக ஓரு அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடியவர் என்ற சாதனையைத் தவறவிட்டார் ரோகித் சர்மா.

மொத்தம் 165 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித், டெக்கான் சார்ஜெர்ஸ் அணிக்காக 32 போட்டிகளிலும், மும்பை அணிக்காக 133 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2008-ல் டெக்கான் சார்ஜெர்ஸ் அணிக்காக விளையாடியபோது சி.எஸ்.கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
Rohit Sharma Injury
ரோஹித் சர்மாவுக்கு காயம். (Twitter)


2011-ல் மும்பை அணியில் இணைந்த பிறகு, முதல் முறையாக ரோகித் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 11 ஆண்டு காலமாக கட்டிக்காத்த சாதனையை அவர் தவறவிட்டார். அத்துடன், நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்காததால் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவரால் முறியடிக்க முடியாமல் போனது. ரெய்னா சி.எஸ்.கே அணிக்காக தொடர்ச்சியாக 134 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐ.பி.எல் லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்