இலங்கைக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறுவது சந்தேகம்தான் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்து, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டார்.
ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது 2ஆவது போட்டியில் ரோகித் சர்மாவின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீதம் உள்ள ஆட்டங்களுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக தலைமையேற்றார்.
அடுத்ததாக ஜனவரி மாதம் இலங்கை அணி இந்தியாவில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் ரோகித் சர்மா பங்கேற்பது சந்தேகம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணம் அடைவதற்கு இன்னும் கூடுதல் நாட்கள் ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கேமரூன் க்ரீன் வேகத்தில் சுருண்டது தென்னாப்பிரிக்கா… 189 ரன்களுக்கு ஆல் அவுட்
இதனால் அவர் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. அடுத்தாக, கே.எல். ராகுல் மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். மேலும் இந்த போட்டித் தொடர் ஏற்படும் நாட்களின்போது, ராகுல் திருமணம் முடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கே.எல் .ராகுலும் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல். ராகுல் 251 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 27.88. அதிகபட்ச ரன் 73.
‘அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட்…’ – வைரலாகும் சேவாக்கின் பதிவு…
இதேபோன்று 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 434 ரன்கள் எடுத்திருக்கிறார். சராசரி 28.93. அதிகபட்ச ரன் 62.
இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடர் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket