ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மா.. வங்கதேச டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள்!

காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மா.. வங்கதேச டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள்!

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

Rohit Sharma : வங்கதேசத்தில் ஒருநாள் போட்டி தொடரை அடுத்து, 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி நூலிழையில் தோல்வியடைந்து தொடரை தவற விட்ட நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கிய இந்திய அணி  3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கி இமாலய வெற்றி பெற்றது.

இந்நிலையில் வங்கதேசத்தில் ஒருநாள் போட்டி தொடரை அடுத்து, 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது. இதில், கேப்டன் ரோஹித் சர்மா, காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

மேலும், ரோஹித்துக்குப் பதில், கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் பங்கேற்பாரா என்பது, அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் வரும் புதன்கிழமை சிட்டகாங் மைதானத்தில் தொடங்குகிறது.

First published:

Tags: Cricket, Rohit sharma