ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம்! யுவராஜ் சிங் அதிரடி கருத்து

ரோஹித் சர்மா - விராட் கோலி

20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்வு கிடைக்கும் - யுவராஜ் சிங்

  • Share this:
மூன்று விதமான போட்டிகளில் தனித்தனி கேப்டனை நியமிப்பது குறித்து யுவராஜ் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதனிடையே கேப்டன் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியானது. எங்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை என கூறி விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

விராட் கோலி ஒரு நாள், டெஸ்ட், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதால் அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனை குறைக்க கேப்டன் பொறுப்பை பிரித்து தர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண் யுவராஜ் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “முன்பெல்லாம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றது. தற்போது டி20 உட்பட மூன்று விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருப்பது சிரமமான ஒன்று தான். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்வு கிடைக்கும். எனவே விராட் கோலியின் சிரமத்தை எப்படி குறைக்க வேண்டுமென அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்“ என்று யுவராஜ் கூறினார்.

Also Watch

Published by:Vijay R
First published: