ஹிட்மேனுக்கு காயம்... ஐ.பி.எல் போட்டியால் உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோகும் அபாயம்!

MIvKXIP: #RohitSharma injures himself in practice session | 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஹிட்மேனுக்கு காயம்... ஐ.பி.எல் போட்டியால் உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோகும் அபாயம்!
ரோஹித் சர்மாவுக்கு காயம். (Twitter)
  • News18
  • Last Updated: April 10, 2019, 1:36 PM IST
  • Share this:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை முன்னிட்டி பயிற்சியில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 3-வது இடத்திலும், மும்பை அணி 5-வது இடத்திலும் உள்ளது.

இந்தப் போட்டியை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பதால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.


Rohit Sharma Injury
காயத்தால் நடக்க சிரமப்பட்ட ரோகித் சர்மா. (Twitter)


பயிற்சியின்போது அவர் மைதானத்தில் படுத்திருப்பதும், அவருக்கு உடற்பயிற்சி வல்லுனர் அறிவுரை கூறுவதும் போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெறியாகியுள்ளன.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு பறிபோகலாம். ஆனால், ரோகித் சர்மாவின் காயம் குறித்து அணி நிர்வாகம் எந்தவித அறிவிப்பும் செய்யவில்லை.VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading