Home /News /sports /

ஷிகர் தவான் வந்தவுடன் ரிஷப் பண்ட்டை தூக்கிருவோம்- ரோஹித் சர்மா திட்டவட்டம்

ஷிகர் தவான் வந்தவுடன் ரிஷப் பண்ட்டை தூக்கிருவோம்- ரோஹித் சர்மா திட்டவட்டம்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை வென்ற இந்திய அணி நேற்று ரோகித் சர்மாவுடன் ரிஷப் பண்ட்டை களமிறக்கி சோதனை முயற்சி மேற்கொண்டது, ஆனால் அது பயனளிக்கவில்லை, ரிஷப் பண்ட் ஷாட் செலக்‌ஷன் படுமோசமாகி சோபிக்காமல் ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்கவும் ...
    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை வென்ற இந்திய அணி நேற்று ரோகித் சர்மாவுடன் ரிஷப் பண்ட்டை களமிறக்கி சோதனை முயற்சி மேற்கொண்டது, ஆனால் அது பயனளிக்கவில்லை, ரிஷப் பண்ட் ஷாட் செலக்‌ஷன் படுமோசமாகி சோபிக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து இந்த சோதனை முயற்சி தற்காலிகமானதுதான், நிரந்தர முடிவல்ல என்று நேற்று ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

    இது தொடர்பாக ரோஹித் சர்மா கூறியதாவது:

    "இன்று நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சில சவால்கள் இருந்தன. கே.எல் மற்றும் சூர்யா இடையேயான அந்த பார்ட்னர்ஷிப். அதுதான் எங்களுக்குத் தேவையான முதிர்ச்சி. நாங்கள் ஒரு மரியாதைக்குரிய ரன் எண்ணிக்கையை எட்டினோம், இது முக்கியமானது. பந்து வீச்சிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். முழு அணியும் ஒன்று சேர்ந்தது. ஒரு டீமாக இணைந்து செயல்பட்டனர்.அந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் இவர்கள் பேட்டிங் செய்வது முக்கியம்.

    அப்போதுதான் இவர்கள் இடம் பற்றி நீங்கள் தீர்மானிக்க முடியும்.இன்றைய ஆட்டம் சூர்யாவிற்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது.ஆடுகளம் சுலபமாக இல்லை.அதனால் அவர் அணி விரும்பியதை செய்தார், மாறாக தான் செய்ய விரும்பியதை அவர் செய்யவில்லை. ராகுலும், கடைசியில் ஹூடாவின் அந்த சிறிய இன்னிங்ஸும் குறிப்பிடத்தகுந்தவை.

    நான் வித்தியாசமான விஷயங்களைச் செய்யும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. , அதனால் இது வித்தியாசமானது. ரிஷப் பண்ட் ஓப்பனிங் இறங்கியதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் அது அவரது நிரந்தர டவுன் ஆர்டர் இல்லை. நிரந்தரம் இல்லை. அடுத்த ஆட்டத்தில் ஷிகர் தவான் வந்து விடுவார் அவர்தான் ஓப்பனிங். ஷிகர் தவானுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை அதனால் இந்தப் போட்டியில் ஆடவில்லை. நீண்ட கால நோக்குடன் சில விஷயங்களை மனதில் கொண்டு முயற்சி செய்ய விரும்புகிறோம், அதனால் நாம் தோல்வியடைந்தாலும் கவலைப்பட மாட்டோம்.

    இதையும் படிங்க: ஸ்டார் பவுலர் பிரசித் கிருஷ்ணா: செத்த பிட்சிலும் பந்தை குத்தி எழுப்பும் அசாத்திய திறமை

    பனிப் பொழிவு இல்லாதது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, ஆனால் பந்து வீச்சாளர்களிடமிருந்து நான் எதையும் பறிப்பதாக இல்லை. இந்தியாவில் நான் பிரசித் கிருஷ்ணா போன்ற ஒரு பந்து வீச்சை நீண்ட காலமாகப் பார்க்கவில்லை. அவர் திறமையுடன் பந்துவீசினார், வேகத்துடன் வீசினார். மொத்தத்தில் ஒரு கிரேட் பந்துவீச்சு முயற்சி."

    இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ind vs WI ODI, India vs west indies, Rishabh pant

    அடுத்த செய்தி