உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!

ரோஹித் சர்மா

  • Share this:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 10 ரன்னிலும் புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும் கேப்டன் கோலி 12 ரன்னில் அவுட்டாகினர். இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. ரோஹித் சர்மா - ரஹானே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ரோஹித் சர்மா சதம் விளாசியும் ரஹானே அரைச்சதம் அடித்து உள்ளனர். உணவு இடைவேளை வரை இந்திய 213 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு பகுதியாகும். இந்த டெஸ்டில் ரோஹித் சர்மா இதுவரை 14 சிக்சர்கள் விளாசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்கர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.ரோஹித் சர்மா 14 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 13 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இன்றையய டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சிக்சருடன் சதத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - அதிக சிக்சர் அடித்த வீரர்கள்

ரோஹித் சர்மா (இந்தியா) - 14

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 13

மயங்க் அகர்வால் (இந்தியா) - 8

ரவீந்திர ஜடேஜா - 7

Also Watch

Published by:Vijay R
First published: