உலகக் கோப்பைத் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து ஹிட்மேன் 'ரோகித் சர்மா' அசத்தல்!

ICC World Cup 2019 | India vs Pakistan | Team Inida | Rohit Sharma | பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய ஹிட்மேன் ரோகித் சர்மா 34 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

Vijay R | news18
Updated: June 16, 2019, 4:40 PM IST
உலகக் கோப்பைத் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து ஹிட்மேன் 'ரோகித் சர்மா' அசத்தல்!
ரோகித் சர்மா
Vijay R | news18
Updated: June 16, 2019, 4:40 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் 34 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரோகித் சர்மா.

உலகக் கோப்பைத் தொடரின் 22-வது லீக் போட்டியில் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. போட்டியைக் காண மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்ட்ன சர்பராஸ் அஹமது பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

தவான் இல்லாத தொடக்கம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். உலகக் கோப்பைத் தொடரில் முதன் முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதால் கே.எல்.ராகுல் நிதனமாக ஆடினார்.

மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுலின் பதற்றத்தைத் தணித்தார். ராகுல் நிதானமாக விளையாட மறுமுனையில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ரன் சீராக உயர்ந்தது.



பாகிஸ்தான் பவுலர்களைப் பந்தாடிய ஹிட்மேன் ரோகித் சர்மா 34 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து ரோகித் சர்மா அசத்தி உள்ளார். மேலும் அவர் கடைசியாக விளையாடிய 5 ஒரு நாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார். தற்போது, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 76 ரன்களுடனும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

ரோகித் சர்மா விளையாடிய கடைசி 5 ஒரு நாள் போட்டிகள்
95(92)
56(89)
122(144)*
57(70)
50(34)*

Also Watch

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...