சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா... வலுவான நிலையில் இந்திய அணி

சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா... வலுவான நிலையில் இந்திய அணி
இதேபோல் இந்திய வீரர்களில் கடந்த 1994-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சித்து 8 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது 13 சிக்ஸர்கள் அடித்து அந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
  • News18
  • Last Updated: October 2, 2019, 2:05 PM IST
  • Share this:
இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்   

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர்.


அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 154 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடித்த 4-வது சதம் இதுவாகும்

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மாயன்க் அகர்வால் 172 பந்துகளில் 76 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார்.

இந்திய அணி 54 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 179 ரன்களை எடுத்துள்ளது.Also watch

First published: October 2, 2019, 1:46 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading