சதமடித்து அசத்திய ரோஹித்.... இந்திய அணியை காப்பாற்றிய ரோஹித் - ரஹானே ஜோடி

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்

    இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களம் கண்டனர். இதில் மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபடா பந்துவீச்சில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் ரன் ஏதும் எடுக்காமல் ரபடா பந்துவீச்சில் வீழ்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அன்ரிச் பந்துவீச்சில் வெளியேறினார்.

    இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடித்த 6 சதம் இதுவாகும்


    இந்திய அணி தற்போது வரை ( 45 ஓவர்) 3 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.

    மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் விளையாடி வருகிறது

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published: