சூப்பர் ஓவரின் கடைசி 2 பந்தில் 2 சிக்சர்கள் விளாசிய ஹிட்மேன்... வைரல் வீடியோ

ரோஹித் சர்மா

 • Share this:
  நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

  இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்  போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

  இதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் அடித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. கடைசி ஓவரில் நியூசிலாந்து 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த போது ஷமி அபாரமாக பந்துவீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

  இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் சூப்பர் ஓவரை பும்ரா வீச நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் களமிறங்கினாரகள்.

  சூப்பர் ஓவர் பரபரப்பாக இருக்க கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 2 பந்துகளையும் ஹிட்மேன் ரோஹித் சர்மா சிக்சருக்கு விளாச இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

  Published by:Vijay R
  First published: