இது என்ன ஒருநாள் போட்டியா..? ரோகித்தின் பொறுப்பற்ற அவுட்! (வீடியோ)

#RohitSharma gets into the ODI mode | நல்ல துவக்கம் கிடைத்தும், டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தும், ரோகித் சர்மா வீணடித்து விட்டார் என இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். #AUSvIND #INDvAUS

news18
Updated: December 6, 2018, 12:53 PM IST
இது என்ன ஒருநாள் போட்டியா..? ரோகித்தின் பொறுப்பற்ற அவுட்! (வீடியோ)
ரோகித் சர்மா (Images: AP)
news18
Updated: December 6, 2018, 12:53 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒருநாள் போட்டியைப்போல் விளையாடிய ரோகித் சர்மா, தேவையில்லாமல் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய லெவன் அணியில் ஹனுமா விஹாரியா? ரோகித் சர்மாவா? என்று சந்தேகம் இருந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புக் கொடுத்தார் ‘கிங்’ கோலி.

தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே கே.எல். ராகுல் வெறும் 2 ரன்னிலும், 7-வது ஓவரில் முரளி விஜய் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா நிதானமாக விளையாட, பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கோலி 3 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

Loading...
பின்னர் வந்த ரகானே 13 ரன்னில் ஆட்டமிழந்ததும், ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா வந்தார். அவர் களமிறங்கியதும், ஒருநாள் போட்டியா ? டெஸ்ட் போட்டியா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கும். ஏனென்றால், 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். அணியின் எண்ணிக்கை உயர்கிறது என்று நிம்மதி அடைவதற்குள் ரோகித் சர்மா அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் வீசிய 38-வது ஓவரின் 2-வது பந்தில் ரோகித் சர்மா, சிக்சர் அடித்தார். 3-வது பந்திலும் சிக்சர் அடிக்க முயற்சியில் ரோகித் தூக்கியடித்த பந்தை ஹேரிஸ் மார்கஸ் கேட்ச் பிடித்தார். சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு ரோகித் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.சிலருக்கு நல்ல துவக்கம் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். ஆனால், நல்ல துவக்கம் கிடைத்தும், டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தும், ரோகித் சர்மா வீணடித்து விட்டார் என இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்