முகப்பு /செய்தி /விளையாட்டு / 'விராட் கோலி டெம்ப்ளேட்.. தனி ஸ்டைல் இல்லை..' ரோஹித் சர்மாவை வார்த்தைகளால் வாரிய கம்பீர்!

'விராட் கோலி டெம்ப்ளேட்.. தனி ஸ்டைல் இல்லை..' ரோஹித் சர்மாவை வார்த்தைகளால் வாரிய கம்பீர்!

கிரிக்கெட்

கிரிக்கெட்

ரோஹித் சர்மா கேப்டன்சியில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டை தான் பின்பற்றி வருகிறார் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகள் முடிந்த நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரின் வெற்றி தோல்வியானது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வாகும் அணிகளை முடிவு செய்யும். அப்படியிருக்க,டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் அடுத்த ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து வழிநடத்தி வரும் நிலையில்,முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அணியின் கேப்டன்ஷிப் குறித்து முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். கவுதம் கம்பீர் கூறுகையில், உண்மையாக சொன்னால் நான் ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை நம்புகிறேன், ஆனால் ரோஹித் சர்மா கேப்டன்சியில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டை தான் பின்பற்றி வருகிறார். அவருக்கு என தனிபானி ஏதும் இல்லை. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி ஸ்டைலுக்கும் விராட் ஸ்டைலுக்கும் எந்த வேறுபாடும் நான் பார்க்கவில்லை.

இந்த அணியை விராட் கோலி மிக சிறப்பாக வழிநடத்தினார். அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி எப்படி சிறப்பாக பயன்படுத்தினாரோ அதையேத்தான் ரோஹித்தும் பின்பற்றுகிறார். ரோஹித்திற்கு உண்மையான சாவல் என்பது வெளிநாடு சுற்றுப்பயணத்தில் தான் காத்திருக்கிறது. அவர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து செல்லும் போது தான் மிகப்பெரிய சவாலை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Gautam Gambhir, Rohit sharma, Virat Kohli