''கொஞ்சம் குழப்பமாக இருந்தது''... சூப்பர் ஓவர் வாய்ப்பு பும்ராவுக்கு ஏன்..? - ரோஹித் சர்மா

India vs Newzealand | நேற்றைய போட்டியில் பும்ரா சொதப்பிய போதும், ஷமியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது

''கொஞ்சம் குழப்பமாக இருந்தது''... சூப்பர் ஓவர் வாய்ப்பு பும்ராவுக்கு ஏன்..? - ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வீசும் வாய்ப்பு பும்ராவிற்கு ஏன் வழங்கப்பட்டது என்று துணைக் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில்  இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.

இந்திய அணி வெற்றி பெற முக்கிய வீரராக இருந்தவர் முஹமது ஷமி. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் பும்ரா சொதப்பிய போதும், ஷமியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இதனால் சூப்பர் ஓவரை முஹமது ஷமி வீசுவார் என்று எதிர்பார்த்த நிலையில்  பும்ராவே வீசினார்.


சூப்பர் ஓவரிலும் பும்ரா 17 ரன்களை வாரி வழங்கினார். இதனால் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் ரோஹித் கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்கள் விளாசி இந்தியாவை சூப்பர் ஓவரில் வெற்றி பெற செய்தார். இந்தப் போட்டிக்கு பின் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பும்ராவிற்கு சூப்பர் ஓவர் வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து பேசினார். அதில், “சூப்பர் ஓவருக்கு என்று தனியாக எந்த திட்டமில்லை. பும்ரா இந்திய அணியின் நட்சத்திர பவுலர். அதே சமயம் ஷமி மற்றும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றியும் ஆலோசித்தாம். எங்களுக்கு சற்று குழப்பமாகவே இருந்தது. யாக்கர் மற்றும் மெதுவாக பந்துவீசுவதில் பும்ரா திறமை வாய்ந்தவர் என்பதால் சூப்பர் ஓவர் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது“ என்றார்.
First published: January 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading