Home /News /sports /

பாகிஸ்தானுடன் இதனால் தான் தோற்றோம்..! தோல்விக்கு விளக்கமளித்த ரோஹித் ஷர்மா

பாகிஸ்தானுடன் இதனால் தான் தோற்றோம்..! தோல்விக்கு விளக்கமளித்த ரோஹித் ஷர்மா

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா

டாஸ் வெல்லும் அணிகள் இலக்கை விரட்ட முடிவெடுத்தால் அந்த அணிகள் வெற்றி பெறுவது என்பது யுஏஇ-யின் வழக்கமாக இருக்கிறது, நேற்று பாகிஸ்தான் அணியும் இந்தியாவை வீழ்த்தியது சேசிங்கில்தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • internationa, IndiaUAEUAE
டாஸ் வெல்லும் அணிகள் இலக்கை விரட்ட முடிவெடுத்தால் அந்த அணிகள் வெற்றி பெறுவது என்பது யுஏஇ-யின் வழக்கமாக இருக்கிறது, நேற்று பாகிஸ்தான் அணியும் இந்தியாவை வீழ்த்தியது சேசிங்கில்தான், இதனையடுத்து ரோஹித் சர்மா, 2வது இன்னிங்ஸ் ஆடுவோருக்கு பிட்ச் சற்றே எளிதாகி விடுகிறது என்று கூறியுள்ளார்.

ஆசியகோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி ஓவரில் 4 டாட்பால்களை விட்டதால் தோல்வியில் இதுவும் ஒரு பெரிய பங்கு வகித்து விட்டது. சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா மிடில் ஆர்டரில் ஏமாற்றமளித்தனர்.

இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், போட்டிக்கு பின் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Also Read : கேப்டன்சியை நான் உதறியபோது தோனி மட்டும்தான் எனக்கு மெசேஜ் செய்தார் - விராட் கோலி

அப்போது பேசிய ரோஹித் சர்மா, இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன். எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும்.

பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர். இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி என்பது எங்களுக்கு தெரியும். ரிஸ்வான் மற்றும் நவாஸ் இடையே கூட்டணி நீடித்தபோதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால், அந்த கூட்டணி சற்று நீண்ட நேரம் நீடித்துவிட்டது. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 2-வது இன்னிங்சின் போது பிட்ச் மாறிவிட்டது என்பதையும் அது அவர்களுக்குச் சாதகமாக இருந்தது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம் என்றார். இந்திய அணி இப்போது ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Published by:Raj Kumar
First published:

Tags: Asia cup, Asia cup pakistan india, India captain Rohit Sharma

அடுத்த செய்தி