சச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

ICC World Cup 2019 | India vs Pakistan | Rohit Sharma | பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபராமாக விளையாடிய ரோகித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரி விளாசி 140 ரன்கள் எடுத்தார்

Vijay R | news18
Updated: June 16, 2019, 7:09 PM IST
சச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ரோகித் சர்மா
Vijay R | news18
Updated: June 16, 2019, 7:09 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா இருவேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரின் 22-வது லீக் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டியை காண மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். தவான் இல்லாத தொடக்கம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். உலகக் கோப்பைத் தொடரில் முதன் முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதால் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார்.

கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா


மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுலின் பதற்றத்தைத் தணித்தார். ராகுல் நிதனமாக விளையாட மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ரன் சீராக உயர்ந்தது.

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரி விளாசி 140 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 3 சிக்சர் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் சிக்சர் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், டி20, ஒரு நாள் போட்டி) மகேந்திர சிங் தோனியும், ரோஹித் சர்மாவும் 355 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் இருந்தனர். தற்போது, ரோஹித் சர்மா 358 சிக்சர்கள் விளாசி தோனியை பின்னுக்கு தள்ளி உள்ளார். இன்றைய போட்டியில் தோனி 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
Loading...மேலும் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்களில் சச்சின் சாதனையையும் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். சச்சின் 219 போட்டிகளில் 24 சதம் அடித்தார். ரோகித் சர்மா 203 போட்டிகளில் 24 சதம் அடித்து சச்சினை முந்தியுள்ளார்.

குறைந்த போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்கள்
142 ஹாசிம் அம்லா, தென்னாப்பிரிக்கா
161 விராட் கோலி, இந்தியா
192 டி-வில்லியர்ஸ் தென்னாப்பிரிக்கா
203 ரோகித் சர்மா, இந்தியா
219 சச்சின் டெண்டுல்கர், இந்தியா

Also Watch

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...