சச்சினின் பல ஆண்டு கால சாதனையை முறியடித்த ரோகித் ஷர்மா!

ரோகித் ஷர்மா

ICC World Cup 2019 | #IndiavsAustralia | Rohit Sharma | குறைந்த போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ஷர்மா படைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஹிட் மேன் ரோகித் ஷர்மா சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 14-வது போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி பொறுப்பான ஆட்டம்:

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான், ரோகித் ஷர்மா களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின் அதிரடியாக விளையாட தொடங்கினர்.

இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தனர். ஷர்மா 57 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் தவான் தனது 17-வது சதத்தைப் பதிவு செய்து 117 ரன்களில் வெளியேறினார்.சாதனை படைத்த ஷர்மா:

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் ரோகித் ஷர்மா 20 ரன்களைக் கடந்த போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000 ரன்களை குவித்த 4-வது வீரர் என்ற பெருமையை எட்டினார்.

மேலும் குறைந்த போட்டிகளில்(37) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் 40 போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2000 ரன்கள் அடித்த வீரர்கள் :

ரோகித் ஷர்மா 37 போட்டிகள்

சச்சின் டெண்டுல்கர் 40 போட்டிகள்

விவ் ரிச்சர்ட்ஸ் 44 போட்டிகள்

Also Watch

Published by:Vijay R
First published: