Home » News » Sports » CRICKET ROHIT SHARMA BAGS 5 CATCHES IN BRISBANE TEST JOINS ELITE LIST MUT

அன்று ஸ்ரீகாந்த், ராகுல் திராவிட், இன்று ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா: பிரிஸ்பனில் சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை எடுத்த இந்திய வீரர்களுடன் ஹிட்மேன் ரோஹித் சர்மாவும் இணைந்தார்.

அன்று ஸ்ரீகாந்த், ராகுல் திராவிட், இன்று ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா: பிரிஸ்பனில் சாதனை
ரோஹித் சர்மா சாதனை.
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை எடுத்த இந்திய வீரர்களுடன் ஹிட்மேன் ரோஹித் சர்மாவும் இணைந்தார்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 5 கேட்ச்களை எடுத்து இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

இன்று ஷர்துல் தாக்குர் வீசிய பந்தில் கேமரூன் கிரீன் கொடுத்த கேட்சை அள்ளிப் போட்ட ரோஹித் சர்மா 5வது கேட்சைப் பிடித்து, ஒரு டெஸ்ட் போட்டியில் 5 கேட்ச்களை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.


பிரிஸ்பன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிம் பெய்ன் ஆகியோரது கேட்ச்களை அள்ளிய ரோஹித், 2வது இன்னிங்சில் மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன் கேட்ச்களை எடுத்து 5 கேட்ச்களைப் பூர்த்தி செய்தார்.

இதற்கு முன்பாக ஆஸி.க்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 5 கேட்ச்களை எடுத்தோர் பட்டியல்:

ஏக்நாத் சோல்கர் (சென்னை, 1969-70)கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ( பெர்த், 1991-92)

ராகுல் திராவிட் (சென்னை, 1997-98).

ரோஹித் சர்மா (பிரிஸ்பன் 2020-21).
First published: January 18, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories