முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 உலக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட மாட்டார்கள்…முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து…

டி20 உலக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட மாட்டார்கள்…முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து…

ரோஹித் சர்மா - விராட் கோலி

ரோஹித் சர்மா - விராட் கோலி

இந்திய இளம் வீரர்கள் ஏராளமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இதனால் அவர்களுக்கு எந்தவொரு அறிவுரையும் தேவையில்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் மூத்த வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி ,கே.எல். ராகுல் ஆகியோர் மாறியுள்ளனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இவர்கள் மூவரும் விளையாடவில்லை. இவர்கள் மூவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.  இந்த 2 தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியுள்ளது.

அடுத்தடுத்து நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடர்களுக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணி நிர்வாகமும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான வாசிம் ஜாபர் கூறியதாவது- விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கும் டி20 போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது பெரிய மேட்சுகளில் கவனம் செலுத்துகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், அடுத்து வரும் ஐபிஎல், அதன் பின்னர் வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர்களது கவனம் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதே போன்று இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித், சர்மா விராட் கோலி ஆகியோர் விளையாடமாட்டார்கள் என்று கருதுகிறேன்.

விராட் கோலி ஒருவேளை பங்கேற்கலாம். ஆனால் ரோஹித் சர்மா நிச்சயமாக அடுத்த டி20 போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு ஏற்கனவே 36 வயது ஆகிவிட்டது. இந்திய இளம் வீரர்கள் ஏராளமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இதனால் அவர்களுக்கு எந்தவொரு அறிவுரையும் தேவையில்லை என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket