பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த சர்மா - ராகுல் ஜோடி!

ICC World Cup | India vs Pakistan | Team India | KL Rahul | Rohit Sharma | உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 ரன்கள் கடந்த முதல் தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.

Vijay R | news18
Updated: June 16, 2019, 5:18 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த சர்மா - ராகுல் ஜோடி!
கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா
Vijay R | news18
Updated: June 16, 2019, 5:18 PM IST
உலகக் கோப்பைத் தெடாரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

உலகக் கோப்பைத் தொடரின் 22-வது லீக் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டியை காண மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். தவான் இல்லாத தொடக்கம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். உலகக் கோப்பைத் தொடரில் முதன் முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதால் கே.எல்.ராகுல் நிதனமாக ஆடினார்.



மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுலின் பதற்றத்தைத் தணித்தார். ராகுல் நிதனமாக விளையாட மறுமுனையில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ரன் சீராக உயர்ந்தது.

பொறுப்புடன் விளையாடி ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி 100 ரன்களைக் கடந்தனர். இதன் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 ரன்கள் கடந்த இந்திய அணியின் முதல் தொடக்க ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்தனர். இந்திய அணி 136 ரன்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் 57 ரன்களில் அவுட்டானார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 ரன்களைக் கடந்த தொடக்க ஜோடி
175* ஹேய்னஸ் - லாரா, 1992
147 ஸ்மித் - ஆதர்டன்,1996
146 வார்னர் - பின்ச், 2019
136 சர்மா - கே.எல்.ராகுல், 2019
115 ஃப்ளவர் - தவாரே, 1983

Also Watch

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...