ஐசிசியின் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த 2 இந்திய வீரர்கள்... கேப்டன் வில்லியம்சன் தான்!

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவுண்டரி எண்ணிக்கைகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஐசிசியின் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த 2 இந்திய வீரர்கள்... கேப்டன் வில்லியம்சன் தான்!
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவுண்டரி எண்ணிக்கைகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • News18
  • Last Updated: July 15, 2019, 7:04 PM IST
  • Share this:
ஐசிசி  அறிவித்துள்ள உலகக் கோப்பை அணியில் கேன் வில்லியம்சனுக்கு தான் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி உலகக்கோப்பைத் தொடர் கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவுண்டரி எண்ணிக்கைகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.


உலகக் கோப்பை போட்டிகளின் முடிவின் அடிப்படையில் ஐ.சி.சி உலகக் கோப்பை அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணியில் இந்திய வீரர்களில் ரோஹித் சர்மாவும், பும்ராவும் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக வில்லியம்சன் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஐ.சி.சி வெளியிட்ட உலகக் கோப்பை அணி

1. ஜாசன் ராய் (இங்கிலாந்து) - 443 ரன்கள்2. ரோஹித் சர்மா (இந்தியா) - 648 ரன்கள்
3. கேன் வில்லியம்சன் (கேப்டன்) (நியூசிலாந்து) - 578 ரன்கள்
4. ஜோ ரூட்(இங்கிலாந்து) - 556 ரன்கள்
5. சஹிப்-அல்-ஹசன் (வங்கதேசம்) - 606 ரன்கள், 11 விக்கெட்கள்
6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 465 ரன்கள், 7 விக்கெட்கள்
7. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்) (ஆஸ்திரேலியா) - 375 ரன்கள், 20 விக்கெட்டை வெளியேற்றிள்ளார்
8. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 27 விக்கெட்கள்
9. ஆர்ச்சர் (இங்கிலாந்து) - 20 விக்கெட்கள்
10. ஃபெர்குசன் (நியூசிலாந்து) - 21 விக்கெட்கள்
11. பும்ரா (இந்தியா) - 18 விக்கெட்கள்

Also Read : ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள்?

Also Read : உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் 7 பேர் அயல்நாட்டவர்!

First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading